பசலைக்கீரை இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுக்கிறது.
பசலை கீரையிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைபாடு ஏற்படமல் தடுக்கிறது.
பசலைகீரையில் அதிகமாக பச்சையம் உள்ளது. இந்த பச்சையமானது உடலில் கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது
பசலைக்கீரை ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
பசலை கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் உடல் பருமனாவதில் இருந்து தப்பிக்கலாம்.
பசலைகீரை வாய்ப்புண்ணுக்கு மிக சிறந்த மருந்தாகும்.
பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு பைட்டோ நியுட்ரியண்ட்டுகள் இருக்கிறது. இது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
இந்த கீரையில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இக்கீரை குளிர்ச்சி தன்மை கொண்டாதாகும். அதனால் குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள் இந்த கீரை அதிகம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சத்துக்கள் | கிராம் | அளவு |
---|---|---|
ஈரம் | 100g | 81.1 |
புரதம் | 100g | 4.4 | கொழுப்பு | 100g | 0.8 | தாதுப்பொருள் | 100g | 4.5 | எரி சத்து (கனலி) | 100g | 62 | சுண்ணாம்பு | 100g | 306 | பாஸ்பரஸ் | 100g | 462 | இரும்பு | 100g | 8.9 |