77.கொய்யா இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். அது அற்புதமான பண்புகளையும் பயன்களையும் கொண்டது.

கொய்யா நார்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம், தாமிரம், மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.   ஒரு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி அளவை போல் கொய்யா நான்கு மடங்கு வைட்டமின் சி கொண்டது. கொய்யா இலைகள் வெப்ப மண்டல நாடுகளில் பாரம்பரிய மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. க்யூயர்சிடின், வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகளை கொண்டுள்ளது.

கொய்யா இலையின் நன்மைகள்:

1.புற்றுநோய்:

கொய்யாவில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் கட்டி வளர்ச்சிகளை தடுக்கிறது. இது பெருங்குடல், மார்பகம், வாய், சருமம், வயிறு, வாய் குழி மற்றும் நுரையீரல் புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும். கொய்யா உணவில் கொழுப்பு இல்லாததால் பெருங்குடலை நச்சு தன்மையிலிருந்து பாதுகாக்கிறது.

2.நீரிழிவு:

ஜப்பானில் உள்ள யாகுல்ட் மத்திய நிறுவனம் நடத்திய கொய்யா இலை பற்றிய ஆய்வில் கொய்யா இலை தேனீர் ஆல்பா-glucosidease நொதி செயல்பாட்டை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். கொய்யா இலை தேனீர் குடித்த 12 வாரங்களில் இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவையும் உடல் எடையையும் குறைக்கிறது.

3.செரிமானம்:

கொய்யா இலை தேனீர் அல்லது கொய்யா சாற்றை அருந்தினால் செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சை குறைக்கிறது.

4.முடியை உறுதிபடுத்த:

கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி பலம் பெறும்.

5.முகப்பரு சிகிச்சை:

கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி முகப்பரு உருவாவதை தடுக்கிறது.

6.தோல் பிரச்சினை:

கொய்யா, தோல் அமைப்புமுறை மேம்படுத்துகிறது. தளர்வான தோல் சரிசெய்வதில் சந்தையில் கிடைக்கும் ஊட்டமளிக்கும் லோஷன்களை விட இது சிறந்தது. கொய்யாவில் உள்ள தாதுக்கள் மற்றும் சத்துக்கள் தோலின் நிறம் மற்றும் தோலின் சுருக்கத்தை சரிசெய்கிறது

7.பல்வலி

வைட்டமின் சி அதிக அளவு இருப்பதால் பற்களின் ஈறுகளில் இரத்தப்போக்கு மற்றும் வீக்கம் ஆகியவற்றின் சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்.

இது போல இன்னும் ஏராளமான நன்மைகள் உண்டு

மற்ற கீரைகள்

51.காட்டுக்குடுகு கீரை /நாய்வேளை கீரை
நாய் கடுகு! பலர் இந்த பெயரை கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த செடியை  நீங்கள் தெருவோரங்களில், கட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம்
பூந்தாழை ரம்பை
50. பூந்தாழை ரம்பை இன்று ஒரு வாசனையான, அழகான கீரை ..அதன் பெயர் ரம்பை …பந்தன் இலை என்றும் அழைக்கின்றனர் .இது ஒரு வாசனை ஊட்டி பிரியாணி,
49. இன்சுலின் கீரை
இந்த இன்சுலின் கீரை வளமான ஈரப் பதம் உள்ள இடங்களில் நன்கு வளரக் கூடியது. இந்தத் தாவரம் ஈஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். மெக்சிகோ மற்றும் கோஸ்டாரிகா

Share

Facebook
Pinterest
WhatsApp