45. புண்ணாக்கு கீரை

புண்ணாக்கு கீரை

புண்ணாக்கு கீரை

நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம் கிராமப்புறங்களில் பல வகை கீரைகள் விளைகின்றன அதில் ஒன்றுதான் பிண்ணாக்குக் கீரை பிண்ணாக்குக் கீரை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்..

பிண்ணாக்குக் கீரை பயன்கள்

புற்று நோய் 

பிண்ணாக்கு கீரை ஒரு சித்த மருத்துவ மூலிகையாகும். மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை இக்கீரை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது

விஷ கடி

நமது வீடு மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இருக்கும் தோட்டங்கள், புதர்களில் தேள், பூரான்,தேனீ, விஷ வண்டுகள் போன்றவை அதிகம் இருக்கின்றன. அவற்றினால் கடிபட்ட நபர்கள் அந்த பூச்சிகளின் நச்சு ரத்தத்தில் கலந்து ஒவ்வாமை ஏற்படுத்தலாம். இத்தகைய ஒவ்வாமை பிரச்சனை நீக்கவும், விடம் பரவாமல் தடுக்கவும் பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டால் நமது உடலில் பரவும் விஷ பூச்சிகளின் நச்சு முறியும்.

கல்லீரல்

அதிகம் மது, போதை பொருட்களை பயன்படுத்துதல், தவறான உணவு பழக்கம் கொண்டவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டு உடல் நலத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்த கூடும். இப்படிப்பட்டவர்கள் மேற்கண்ட பழக்கங்களை நிறுத்துவதோடு அடிக்கடி பிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதால் கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளை போக்கலாம்.

மூலம்

இன்றைய காலத்தில் அதிகம் பேரை பாதிக்கும் ஒரு நோயாக மூலம் நோய் இருக்கிறது. அதிகம் காரமான உணவுகளை உண்பது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இந்த மூல நோயை விரைவில் போக்குவதிலும், அந்த மூலத்தினால் ஏற்பட்ட புண்களை ஆற்றுவதிலும் பிண்ணாக்கு கீரை சிறப்பாக செயல்படுகிறது. எனவே மூல பாதிப்புள்ளவர்கள் பிண்ணாக்கு கீரையை அடிக்கடி உண்ண வேண்டும்.

வாயு தொந்தரவுகள்

வாதம் தன்மை அதிகம் கொண்ட உணவுகளை உண்பதால், வயிற்றில் வாயுவின் தன்மை அதிகம் ஆகி சிலருக்கு வாயுக்கோளாறுகள் ஏற்படுகின்றது. பிண்ணாக்கு கீரை உடலின் வாத தன்மையை சீராக்கி வாயு கோளாறுகளை சீர் செய்து உடலை ஆரோக்கியம் பெற செய்கிறது.

நோய் எதிர்ப்பு

உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போதுபிண்ணாக்கு கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்ததால் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். எனவே வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது பிண்ணாக்கு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்வது நல்லது

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp