83. அரச இலை

நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும். அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம்

இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது

மஞ்சள் காமாலை

இளஞ்சிவப்பான அரசமர இலைகளை எடுத்துக்கொண்டு அதனை சாறாக்கி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் மூன்று முறை குடிக்க வேண்டும். இது மஞ்சள் காமாலையை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தக்கூடியது

கல்லீரல் பாதுகாப்பு

சில இலைகளை எடுத்துக்கொண்டு அவற்றுடன் கற்கண்டை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இதனை நீருடன் நன்கு கலந்து பின் வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் கல்லீரல் பாதுகாப்பாய் இருக்கும். அதிக குடிப்பழக்கம் உள்ளவர்கள் இதனை செய்வது மிகச்சிறந்த பலனையளிக்கும்.

இதய ஆரோக்கியம்

சில மென்மையான இலைகளை எடுத்துக்கொண்டு அதனை இரவில் தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். காலையில் தண்ணீரை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் அது இதயம் படபடப்பாய் உணர்வதை குறைப்பதோடு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் செய்யும்.

இது போல இன்னும் ஏராளமான நன்மைகள் உண்டு…

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp