80. நார்த்தை இலை

எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், இரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் நார்த்தங்காயை தவிர்க்கவேண்டும். ஆனால் நார்த்தங்காய் இலை பொடியை அனைவரும் சாப்பிடலாம்.

நார்த்த இலை பொடியின் பயன்கள்

செரிமான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு நார்த்தை இலைப்பொடி சாப்பிட்டால் உடனே குணமாகும்.

பித்தம், வாதம் போன்ற உடல் சூட்டினால் ஏற்படும் பிரச்சினைகள் தீரும்.

நார்ச்சத்து அதிகளவு இருப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்தாகும்.

மூளையின் செயல்பாட்டை தூண்டிவிடும், அதனால் மூளை புத்துணர்வுடன் செயல்படும்.

வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை வராமல் தடுக்கும்.

மூட்டு வலியை குணமாக்கும், மூட்டு வலி வரவிடாமல் தவிர்க்கும்.

இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.

புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும்.

கால்சியம், மக்னீசியம், அயோடின், இரும்புச்சத்து, சோடியம், நார்சத்துகள் அதிக அளவு உள்ளது.

நார்த்தை இலையில் செய்யும் வேப்பிலைக்கட்டி செய்முறை

வேப்பிலைக்கட்டி – தேவையான பொருட்கள்

நாரத்தை அல்லது எலுமிச்சை இலை நன்றாக அழுத்தி 2 கப், ஓமம் – ஒன்றரை ஸ்பூன்

வரமிளகாய் – 8 அ 10

புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு

(அ)

2 எலுமிச்சை பழம் சாறு

உப்பு தேவையான அளவு

செய்முறை

இலைகளை நன்கு கழுவி, துடைத்து வைக்கவும்.  பின்னா் அதன் நடுவில் உள்ள காம்பை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு மிக்சி ஜாாில் ஓமம் உப்பு மிளகாய் போட்டு அரைக்கவும். (புளி சோ்ப்பதாக இருந்தால் அதையும் அரைக்கவும்.) பின்னா் இலையைச் சிறிது சிறிதாகப் போட்டு அரைக்கவும்.  அதன் பின்னா் கலவையை ஒரு பொிய தட்டில் போட்டு எலுமிச்சை சாறு சோ்த்து சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். இப்பொழுது வேப்பிலைக் கட்டி தயார்

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp