கரிசலாங்கண்ணி

37. கரிசலாக்கண்ணி

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் வெள்ளை நிற பூக்களை வைத்து  அடையாளம் காணலாம்.ஆயுர்வேதத்தில் பிரிங்கராஜ் என்று அழைக்கப்படுகிறது…

கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில  தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது  குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது  கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து,  வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.

கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து  சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

தேங்காய் எண்ணெயில் கரிசலாக்கண்ணி போட்டு தயாரித்த கூந்தல் தைலத்தை, தினமும் தலையில் தடவி வந்தால், தலைமுடி கறு, கறு என்று இருக்கும்

மற்ற கீரைகள்

வெந்தயக்கீரை
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து  உண்ணலாம். நம் சமையல்கட்டில் அஞ்சரை பெட்டியில் இருக்கும் வெந்தயத்தை
3. கானாவாழை
களைச்செடி என்று நாம் பிடுங்கி எரியும் செடிகளில் ஒன்றான கானாவாழையே இன்றைய கீரை….ரத்தவிருத்தி, கபநோய்களுக்கு, புண்களுக்கு மற்றும் என்னிலடங்கா நோய்க்கு அருமருந்து இந்த கானாவாழை…இந்த கானாவாழை யை
எலுமிச்சை புல்
எலுமிச்சை புல் “லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்”

Share

Facebook
Pinterest
WhatsApp