எலுமிச்சை புல்

38. எலுமிச்சை புல்

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

எலுமிச்சை புல்

“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது

லெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும் ,தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

பலருக்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாகவே இருக்கும். உங்களின் ஆசையை எளிதாக நிறைவேற்றுகிறது இந்த டீ. குறைந்த கலோரிகள் இதில் இருப்பதால், உடல் எடையை மிக சீக்கிரத்திலே இது குறைத்து விடும்.

ஜீரணி உறுப்பு வியாதிகள், மாதவிடாய் வலி போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும் ,உடலின் நச்சுகளை வெளியேற்றும்

எலுமிச்சை புல் தேநீர்

எவ்வாறு தயாரிப்பது..?

இந்த எலுமிச்சை புல் டீயை தயாரிக்க, முதலில் இந்த புல்லை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுத்து நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். இதனை வடிகட்டி நாட்டு சக்கரை அல்லது தேன் கலந்து குடித்து வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்தும் கிடைக்கும்.

மற்ற கீரைகள்

கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது முருங்கையின் பெண் பால் என்று கூட சொல்லலாம்…இது கிராமப்புறங்களில் முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்
87.சீமை அகத்தி இலை
சீமை அகத்தி இலைகள் மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது. இதன் இலை, மலர்கள், காய் மற்றும்  மரப்பட்டைகள், உடல் நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை
துளசி
துளசி மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், சித்த,ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ

Share

Facebook
Pinterest
WhatsApp