கருவேப்பிலை

24.கருவேப்பிலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

கருவேப்பிலை

கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.

நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம்.

ஆனால் இந்தக் கறிவேப்பிலையின் நன்மைகள் ஒருசிலர் (பலர் என்று கூடச் சொல்லலாம்) தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் சாப்பாட்டிலிருந்துத் தூக்கி எறிந்து விடுகிறார்கள். தூக்கி எரியாமல் உண்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. இதன் சுவை சற்றுக் காரத்துடன் கலந்த கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். நாம் சைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி இல்லை அசைவப் பிரியர்களாக இருந்தாலும் சரி, நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கறிவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது.

இதன் பழத்திலும் ஏறாளமான நன்மைகள் உள்ளன. தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்த்து இந்தச் செடியை வளர்ப்பதற்கென்று தனியாக எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. ஒருமுறை நட்டு வைத்தால் அதன் பழங்கள் பழுத்துக் கீழே விழுவதினால் எண்ணற்ற செடிகள் வளர்ந்து விடுகின்றன. கறிவேப்பிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஏராளமாகப் பயிர் செய்யப்ப்படுகிறது. அதுவும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் அனைத்து தோட்டங்களிலும் கறிவேப்பிலை மரம் நீங்காத இடத்தினைப் பெற்று இருக்கிறது.

நம் நாட்டின் அனைத்து இடங்களிலும் கறிவேப்பிலை சாதாரணமாகக் கிடைக்கின்றது. வீடுகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படும் கறிவேப்பிலை மரங்களின் நுனிக் கிளைகளைப் பறித்துப் பயன்படுத்துவதால் பெரும்பாலும் புதர்செடியாகவே காணப்படுகின்றன.

தமிழ்ச் சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கருவேப்பிலை. நம்மைப் போன்ற இன்றய தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில் சேர்த்து வந்துள்ளனர். கறிவேப்பிலையில் கீழ் காணும் பல விதமான மருத்துவ பயன்கள் உள்ளன.

1) இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.

2) வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.

3) குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு.

4) சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.

5) வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது.

6) 7) கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.

8) கல்லீரலைப் பாதுகாக்கிறது.

9) கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது: நோய் மற்றும் இத நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது.

10) முடியை வலுவாக்குகிறது.

11) நீரிழிவு நோய்க்குத் தீர்வு கிடைக்கிறது.

12) செரிமான மண்டலத்திற்கு நல்லது.

மற்ற கீரைகள்

63.சோம்புகீரை
பெருஞ்சீரகக்கீரைதான்  சோம்புக்கீரை.பெண்களுக்கு    பிரஸவத்திற்குப்     பிரகான   காலத்தில்பத்தியச் சமையலுக்கு     இது மிகவும் நல்லது..பைடோகெமிகஸ் எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் நிறைய உள்ள கீரை இது…இது பொதுவாக நோய்
பாலக்கீரை
பாலக்கீரை பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும். தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப்
புளிச்சக்கீரை
புளிச்சக்கீரை புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை

Share

Facebook
Pinterest
WhatsApp