முடக்கத்தான்

18. முடக்கத்தான்

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

முடக்கத்தான்

முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால் முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. முடக்கறுத்தான்பேச்சு வழக்கில் முடக்கத்தான் ஆனது. இந்த முடக்கற்றான் மூலிகை வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு அருமருந்தாகும். முடக்கத்தான் இலைமற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டவை.

முடக்கத்தான் கீரை பயன்கள்

முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம்,பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்,வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

  1. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகின்றன.
  2. முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உணவுடன் உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும்.
  3. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  4. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
  5. முடக்கத்தான் கீரையை வாய்வு பிரச்சனையால் அவதிபடுபவர்கள்சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
  6. மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை மிகவும் நல்லது. ஒரு மேஜைக்கரண்டி முடக்கத்தான் கீரை சாறு பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.
  7. இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
  8. முடக்கத்தான் கீரையானது முதுகு எலும்பு தேய்மானம், பெண்களுக்கு ஏற்படக் கூடிய எலும்புத் தேய்மானம், மூட்டுவாதம், மூட்டுவலிகளைக் குணப்படுத்தும்.
  9. இதை ஆரம்பத்தில் சாப்பிடத் தொடங்கும்போது முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு சிலருக்கு மலம் பேதி போன்று போகும். ஆனால் பயப்படத் தேவையில்லை. தொடர்ந்து சாப்பிடலாம். மூளைக்கு பலம் தரும்.
  10. முடக்கத்தான் கீரையின் துவையலை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூலநோய், மலச்சிக்கல்,பாதவாதம், மூட்டுநோய்கள் போன்றவை குணமடையும்.

மற்ற கீரைகள்

குப்பைமேனி கீரை
இது தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். பூனைவணங்கி ,மார்ஜாலமோகினி (மார்ஜாலம் என்றால் பூனை )என்கிற மாற்றுப் பெயரும்
பருப்புகீரை
பருப்புகீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு
முளைக்கீரை
முளைக்கீரை கீரை என்றாலே நமக்கு இந்த கீரை தான் நினைவுக்கு வரும்.அந்த அளவிற்கு இந்த கீரையை அடிக்கடி நாம் பயன்படுத்தி வருகிறோம்…ஏதோ இந்த ஒரு கீரை தான்

Share

Facebook
Pinterest
WhatsApp