39.ஆடாதொடை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க, இயற்கை மனிதர் வாழும் இடங்களில் பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே வைத்துள்ளது. நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க மூலிகைகளைப்போன்றே, சாதாரணமாக எங்கும் காணப்படும் மூலிகைதான், சித்தர்களால் காயகற்ப மூலிகை எனப்போற்றப்படும் ஆடாதோடை.

மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும்.

நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை “ஆயுள் மூலிகை” என அழைப்பர்..

மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன. அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை மூலிகை.

“ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்” எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.

கிராமங்களில், வயல் ஓரங்களில் வேலியை காக்கும் செடியாக, ஆடாதோடை அவற்றின் பசுமையான இலைகளை, கசப்புத்தன்மை காரணமாக, கால்நடைகள் ஆடு உண்ணாததால், ஆடு தொடா இலை ஆடாதொடா என்றானது.. சாலையோரங்களில் அதிக அளவில் காணப்படும், ஆடாதொடா

வசிகா எனும் தாவரவியல் பெயர்கொண்டது ஆடாதோடை. இலை, செடிகளின் பட்டை, வேர் மற்றும் இதன் மலர்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை.

பொதுவான மருத்துவ குணங்களாக, கோழை எனும் சளியை அகற்றும், வயிற்றில் உள்ள நுண்ணிய புழுக்களை அழிக்கும், சிறுநீரை அதிகரித்து, உடல் வழிகளை போக்கும் தன்மைகள் மிக்கது.

ஆடாதோடையில் உள்ள முக்கிய சத்தான வாசிசின், நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை சரியாக்குகிறது.

ஆங்கில மருத்துவத்தில் இருமலுக்கு வாங்கும் பெரும்பாலான சிரப்புகளில் இருப்பது இந்த ஆடதொடா வசிகாவின் சாறு என்பது எத்தனை பேருக்கு தெரியும்…

எனவே இந்த அற்புத மூலிகையை நம் தோட்டத்தில் வளர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்….

மற்ற கீரைகள்

தவசிகீரை
தவசிகீரை உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு
அகத்திகீரை
கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது.அகம்(உள்ளே)+தீ உடலின் நச்சுக்களை சுத்தப்படுத்தும் என்பதால் அகத்தீ என்றாயிற்று….எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. பல மருத்துவக்
புண்ணாக்கு கீரை
புண்ணாக்கு கீரை நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை

Share

Facebook
Pinterest
WhatsApp