48. வாதநாராயனன் கீரை

மனித உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சம நிலையில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்றுகூடினாலும் குறைந்தாலும் ஆரோக்கிய குறைபாடு சந்திக்க நேரிடும்

வாத நாராயணன் என்பது மரம் போன்று வளரக்கூடியது. பார்க்க புளிய மரத்தின் இலைகளை போன்று இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வாத நோய்கள் அண்டாமல் இருக்க வாரந்தோறும் இதன் இலைகளை கீரை போன்று சமைத்து சாப்பிட்டார்கள். வாத நோய்களை போக்குவதாலேயே இதற்கு வாதநாராயணன் என்னும் பெயரை கொண்டதாக சொல்வார்கள். வாத நாராயணன் தரும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

முடக்குவாத நோய்களை தீர்க்க அந்த காலத்தில் கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை தான் பயன்படுத்திவந்தார்கள். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு கை, கால், விரல்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். இதனால் கை, கால் அசைக்க முடியாமல் முடக்கிவிடும். இவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும்.

இவர்கள் வாத இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம். காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும். வாத இலையை நீரில் ஊறவைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றிவந்தால் குடைச்சல் குறையும்.

உடலில் மூட்டுகளிலும் ஆங்காங்கே தேங்கியிருக்கும் வாத நீர் அதிகமானால் மூட்டுகளில் வீக்கம் இருக்கும். கை, கால் குடைச்சல் அதிகமாக இருக்கும். இதை போக்க வாத நாராயணன் இலையை உளுந்து சேர்த்து துவையலாக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் இருக்கும் வாத நீர் மலத்தில் வெளியேறி விடும்..

மொத்தத்தில் மாட்டு பிரட்சனை உள்ளவர்களுக்கு அருமருந்து இந்த வாதநாராயனன் கீரை

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp