35.சக்கிரவர்த்தி கீரை

சக்கிரவர்த்தி கீரை

சக்கிரவர்த்தி கீரை

சக்கிரவர்த்தி என்னால் அரசன் காப்பவன் என்று பொருள்..உடலின் நோய்களிருந்து காப்பதால் சக்கரவர்த்தி கீரை என்றழைக்கப்படுகிறது.

சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித  உணவாகிறது.

ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை  தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது.

சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து  தயாரிக்கலாம்

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு  நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள  இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால்  வலி மறையும்.

சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும்,  ரத்த சோகையை சரிசெய்ய கூடியது.

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp