19. நாட்டு பொண்ணாங்கன்னி

நாட்டு பொண்ணாங்கன்னி

நாட்டு பொண்ணாங்கன்னி

பொன்னாங்கன்னியில் பயன்படுத்தும் கீரைகளாக மூன்று வகை உண்டு…ஆனால் இன்னும் பல ரகங்கள் இருப்பதாக தெரிகிறது..ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி கீரை, சிகப்பு நிற இலையுடைய சீமை/சிகப்பு பொன்னாங்கன்னி, மற்றும் சிறிய எதிர் இலைகள் உடைய நாட்டு பொன்னாங்கன்னி கீரை …

சிறிய இலைகள் உடைய நாட்டு பொண்ணாங்கன்னி கடையில் வாங்கும் கீரையை மெல்லிய காம்பு வைத்தாலே வளர்ந்துவிடும்…அதிக பராமரிப்பு தேவையில்லை….

இந்த வகை கீரை களை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.

வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் நீங்கும்.

உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான டயட் அவசியம். இதற்கு பொன்னாங்கன்னி கீரை உதவுகிறது. பொன்னாங்கன்னி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

மருத்துவ குணங்கள்

பொன்னாங்ககண்ணிக் கீரையை வாரம் ஓரிறு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இன்சுலின் சுரப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வரவிடாமல் காக்கும். குடலிறக்க நோய் குறையும். நெஞ்சு சளியைக் கரைத்து, மார்பு இறுக்கத்தைப் போக்கும். நரம்பு மண்டலத்தைச் சீர் செய்யும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். கண்கள், மூளைக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். ஈரலைப் பலப்படுத்தும். இதை எண்ணெயில் இட்டு காய்ச்சி தலையில் தடவினால் முடி நன்றாக வளரும்.

பொன்னாங்கண்ணிக் கீரையில் இரும்புச்சத்து – 1.63 மில்லி கிராம், கால்சியம் – 510 மில்லி கிராம், வைட்டமின்  – ஏ, பி, சி ஆகியவையும் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் – ஏ அதிக அளவில் உள்ளது. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி, உப்பு, மிளகு சேர்த்து கடைந்து, 48 நாட்கள் உண்டு வந்தால் உடல் வனப்பு பெற்று பொன்னிறமாகப் பொலிவு பெறுவதுடன், நோயற்ற வாழ்வைப் பெறலாம்

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp