27.சாரனைக்கீரை

சாரனைக்கீரை

தானாக சாலையோரங்களிலும், வீட்டுத்தோட்டத்திலும் வளர்ந்து இருக்கும் கீரைகளில் இதுவும் ஒன்று….சாரனையில் வெண்சாரனை, சிகப்பு தண்டு,கருமை நிற சாரனை என்று பல ரகங்கள் உண்டு…இது ஒரு படரும் கொடி வகை செடியாகும்…சிலர் சாரனையும் மூக்கிரட்டைக்கீரையும் ஒன்று என்பர்..ஆனால் இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு வேறு மூலிகைகள்..

மருத்துவ குணங்கள்:

பாஸ்பரஸ், இரும்பு சத்து அதிகமாக இருக்கும் கீரை,முக பருக்கள் நீக்கும் ,ஈரல் நோய்கள், பல் நோய்களுக்கு அருமருந்து, நோய் எதிர்ப்பு சக்தி தரும் ..இன்னும் என்னற்ற பலன்கள் உண்டு…இது கடைகளில் எல்லாம் கிடைக்காது…நம் தோட்டத்தில் தானாக வளர்ந்தால் கூட அது பிடிங்கி எறிகிறோம்…இனியாவது இதன் மருத்துவ மகிமை தெரிந்து அதை உணவில் சேர்த்துக் கொள்வோம்

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp