13. பச்சை கொடிபசலை

பச்சை கொடிபசலை

பச்சை கொடிபசலை

பசலி, கொடி வயலைக் கீரை என்ற  பெயர்களாலும் குறிப்பிடப்படும் பசலை, Indian spinach என்று ஆங்கிலத்தில்  அழைக்கப்படுகிறது. Basella alba என்பது இதன் தாவரப்பெயர். ஆயுர்வேதத்தில் ‘உபோதிகா’, ‘போதகி’, ‘அமிர்த்த வல்லாரை’ என்று அழைக்கிறார்கள்.பசலையின் இலைகள் கனமானதாகவும், முக்கோண வடிவுடையதாகவும், நீளமான காம்புகளை கொண்டதாகவும் இருக்கும்.

பசலையில் கொடிப் பசலை, ஆற்றுப் பசலை, வெள்ளைப் பசலை, கரும் பசலை, சிவப்புப் பசலை, துலுக்கப் பசலை, பேய் பசலை, வறுக்கைப் பசலை, கொத்துப் பசலை, நற்பசலை, குத்துப் பசலை, தானாப் பசலை, கசப்புப் பசலை எனப் பல்வேறு வகைகள் உள்ளன

பசலையில் கொடிப் பசலை, ஆற்றுப் பசலை, வெள்ளைப் பசலை, கரும் பசலை, சிவப்புப் பசலை, துலுக்கப் பசலை, பேய் பசலை, வறுக்கைப் பசலை, கொத்துப் பசலை, நற்பசலை, குத்துப் பசலை, தானாப் பசலை, கசப்புப் பசலை எனப் பல்வேறு வகைகள் உள்ளன

மேல்பூச்சாக பசலையின் சாற்றைப் பூசுகிறபோது உடல் அரிப்பு, தீப்புண்கள், தழும்புகள், பருக்கள், மருக்கள் ஆகியவற்றுக்கும் பயன் தருகின்றன. வேர் தீநீர் பித்த வாந்தியைத் தடுக்கும். குழந்தைகளின் சத்துக் குறைபாட்டை தடுக்கக்கூடியதாகவும் கொடிப்பசலைக் கீரை விளங்குகிறது.கொடிப்பசலை பற்றி அகத்தியர் பாடல்

போகம் மிகக் கொடுக்கும் போர்செய் கபம் பெருக்கும்

ஆகமதிற் றாகமன லைத்தணிக்கும் – 

 மாகுடரின்

மன்னு மலமிளக்கும் மாறா வுரிசை தருந்

தின்னுங் கொடிவசலை செப்பு’. 

போக இச்சையை அதிகப்படுத்தும். கபத்தையும் அதிகப்படுத்தக் கூடியது என்பதால் கபம் மிகுந்தவர்கள் தவிர்க்க வேண்டும். உடலை வருத்துகிற தாகத்தையும் உடல் வெப்பத்தையும் தணிக்கும். குடலில் சேர்ந்து ஊறு செய்யும் மலத்தை உடைத்து இறக்கி வெளித் தள்ளும். சுவையின்மையைப் போக்கி வாய்க்கு ருசியை உண்டாக்கும் என்பதே இந்த பாடலின் பொருள்.

பசலையில் அர்ஜினின், லியூசின், ஐஸோலியூசின், லைசின், திரியோனின் மற்றும் டிரிப்டோபேன் ஆகிய அமினோ அமிலங்களும் பல்வேறு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன. இவற்றோடு சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கரோட்டினாயிட்ஸ், ஆர்கானிக் அமிலங்கள், வைட்டமின் கே சத்துகளும் அதிகம் அடங்கியுள்ளன. நவீன ஆய்வுகள் மூலம் பசலையில் இதயத்தின் சுருங்கி விரியும் தன்மைக்கு உதவிபுரியும் சர்க்கரை சத்தான கார்டியாக் கிளைகோஸைட்ஸ் அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சாதாரணமாக எவ்வித சிரமமுமின்றி வளரக்கூடிய பசலைக் கீரையை  அடிக்கடிப் பயன்படுத்துவோம்

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp