குப்பைமேனி கீரை

21.குப்பைமேனி கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

இது தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும், சாலை ஓரங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், சாதாரணமாக களைச் செடியாக பரவிக் காணப்படும். பூனைவணங்கி ,மார்ஜாலமோகினி (மார்ஜாலம் என்றால் பூனை )என்கிற மாற்றுப் பெயரும் வழக்கத்தில் உள்ளது.

பூனை தனக்கு ஏற்பட்ட உணவு ஒவ்வாமையை இதன் இலையை தேடி உண்டு சரி செய்து கொள்ளும்.அதனால் தான் பூனைவணங்கி என்றானது…ஒரு பூனைக்கே தெரிந்த இதன் மருத்துவ பலன் நமக்கு தெரிகிறது இல்லை…

குப்பைமேனி மாற்று அடுக்கிலும் வட்ட அடுக்கிலுமாக அமைந்த, ஓரத்தில் பற்களுடன், பல அளவுகளில் உள்ள இலைகளை உடைய தாவரம். இலைக்காம்புகளின் இடுக்குகளில் அமைந்த பசுமையான, கொத்தான பூக்களைக் கொண்டது.

தோல் நோய்கள் குணமாக, இதன் இலைச்சாற்றுடன் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் குழைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவர வேண்டும்.

அல்லது குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி, 3 மணி நேரம் ஊறவைத்து, கழுவி வரலாம்.

நீண்ட காலமாக உள்ள தோல் நோய்களுக்கு, குணமாகும்வரை, ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் வீதம், மேலே குறிப்பிட்டுள்ள ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றி வர வேண்டும்.

1 பிடி குப்பைமேனி வேரைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனை 1 லிட்டர் நீரில் இட்டு, 200மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, குடிக்க பூச்சிகள் வெளியாகும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. இந்த நிலையில் தயிர் சாதம் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு இந்த அளவில் ¼ பங்கு மட்டும் கொடுக்க வேண்டும்.

இதன் இலைச் சாற்றினை 4 துளிகள் அளவு நாக்கில் தடவலாம். அல்லது குப்பைமேனி இலையைக் காய வைத்துத் தூள் செய்து, ¼ தேக்கரண்டி அளவு உட்கொண்டுவர கோழை வெளிப்படும்.

குப்பைமேனிச் செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுக்க வேண்டும். அதனை இலேசாக நசுக்கி, 1 டம்ளர் நீரில் இட்டுக் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி, வடிகட்டிக் குடிக்க சளி இருமல் கட்டுப்படும்.

பெண்கள் குப்பைமேனியின் இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திரு‌க்க வேண்டும். பின்னர் கழுவி வர, முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

குப்பைமேனியின் 10 இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து, பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர, தேக அழகும், ஆரோக்கியமும் ஏற்படும்…

மற்ற கீரைகள்

கொத்தமல்லிகீரை
கொத்தமல்லிகீரை கொத்தமல்லி உணவு அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை ஆகும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள்
அகத்திகீரை
கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது.அகம்(உள்ளே)+தீ உடலின் நச்சுக்களை சுத்தப்படுத்தும் என்பதால் அகத்தீ என்றாயிற்று….எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. பல மருத்துவக்
ஆரை கீரை
ஒவ்வொரு தாவரமும் ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால்,

Share

Facebook
Pinterest
WhatsApp