கோவைக்கீரை

34. கோவைக்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

கோவைக்கீரை

கோவைக்காயே நாம் அதிகபேர் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை….சர்க்கரை வியாதிக்கு அருமருந்து…அதன் இலையும் நமது முன்னோர்கள் கீரையாக எடுத்துவந்தனர் என்பது நம் பலருக்கு தெரியாது…

இப்போதெல்லாம் எந்த மாதம் மழை வரும், எந்த மாதம் வெயில் அடிக்கும் என்று உறுதியாக கூற முடிவதில்லை. அந்தளவுக்கு பருவம் தவறி மழையும், வெயிலும் மாற்றி மாற்றி வாட்டுகின்றன. நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்காததன் விளைவே இவை.

தட்ப வெப்பநிலைகளின் மாற்றத்தால், ஒவ்வொருவரின் உடலிலும் பலவகையான மாற்றங்கள் ஏற்படும். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் பரவி வருகின்றன.

இத்தகைய நோய்களிலிருந்து குணமடையலாம். கோவைக்காய், இலை உள்ளிட்டவை சிறந்த மருத்துவ குணம் நிறைந்தது. தோல் நோய், மன அழுத்த பிரச்னைகள், உடல் சூடு உள்ளிட்டவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது

தோல் கிருமிகள் நீங்க: தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும், கோவை இலை பயன்படுகிறது. கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து, சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி, ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும்.

கோடை காலத்தில்  கோவை இலையைக் கஷாயமாகச் செய்து அருந்தினால், உடல் சூடு சமநிலைக்கு வரும். கண்கள் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராமல் தடுக்கும்

மற்ற கீரைகள்

துளசி
துளசி மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், சித்த,ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ
சக்கிரவர்த்தி கீரை
சக்கிரவர்த்தி கீரை சக்கிரவர்த்தி என்னால் அரசன் காப்பவன் என்று பொருள்..உடலின் நோய்களிருந்து காப்பதால் சக்கரவர்த்தி கீரை என்றழைக்கப்படுகிறது. சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம்
சிகப்பு பொன்னாங்கண்ணி
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ =

Share

Facebook
Pinterest
WhatsApp