79.பூசனி இலை

இதுவரை எல்லாரும் பூசணிக்காயைத் தான் உணவில் சேர்த்து வந்தோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா. பூசணிக்காய் இலைகள் கூட நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

இந்த பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, புற்று நோயை தடுக்கிறது, நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, சீரண சக்தியை மேம்படுத்துதல், கொலஸ்ட்ரால் அளவை குறைத்தல், கருவுறுதல் திறனை அதிகரித்தல் போன்ற எண்ணற்ற நன்மைகளை நமக்கு அளிக்கிறது.

இந்த பூசணிக்காய் இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. அறிவியல் ஆராய்ச்சி படி இது டெல்பெரியா ஆக்ஸிடன்ட்டைல்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் வளர்ச்சிக்கு என்று குறிப்பிட்ட பருவகாலம் இல்லை. ஆண்டு முழுவதும் காணப்படுவதால்

நாம் எளிதாக இதை பெறலாம். குறிப்பாக மழைக்காலத்தில் இது அதிகமாக காணப்படுகிறது.

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுத்து இளமையை காக்கும்,நீரழிவு நோய்,சரும நோய்கள், எலும்பு பிரட்சனைகள் என இது பல நோய்க்கு அருமருந்து…

எப்படி சாப்பிடுவது

இந்த இலைகள் மற்ற இலைகளைப் போல் கசப்பதில்லை. இதை நீங்கள் சூப், சாலட் போன்றவற்றில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp