92 – மலைவேம்பு

வேம்பில் அதிக வகைகள் உண்டு. மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் கொடுக்கவேண்டும். மலைவேம்பை நன்கு அரைத்து மூன்று வேளை தர வேண்டும்.

இதை சாப்பிடுபவர்கள் எண்ணெய் பண்டங்கள் மற்றும் புளியை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்பட  காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள  கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது.

டெங்கு காய்ச்சலுக்கும் இதனை கஷாயம் செய்து கொடுக்கலாம். சிறுநீரில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களுக்கு  மருந்தாகிறது.

இதன் இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.

கொழுந்தான வேப்ப இலைகளைப்  பறித்து, அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த கஷாயத்தை ஆறு தேக்கரண்டி அளவு குடிக்க  வேண்டும்.

தோல் நோய்கள் குணமாக வேம்பு எண்ணெய்யை நோயுள்ள பகுதியில் பூச வேண்டும். இரசத்தில் வேப்பம் ஈர்க்கு மற்றும் வேப்பம் பூக்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள பித்த நோய்கள் குணமாகும்.

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp