84.பீர்க்கன் இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

பீர்க்கன் காயே நாம் உணவில் சேர்க்கிறோம் ..ஆனால் அதன் இலைகளும்,விதைகளும் வேர் என முழு தாவரமுமே மருத்துவ குணங்கள் கொண்டதுதான் …

  1. சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால்போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.
  2. பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால்நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  3. பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சுஎண்ணெய்யாய்த் திகழ்கிறது.
  4. இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும்கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.
  5. மருத்துவ குணம் உடைய இக்காய் முற்றிய நிலையில் உலர்ந்தபின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எஞ்சிய நார்ப்பகுதி குளியலுக்கு உடலைதேய்த்து உதவ பயன்படுகிறது.

கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

மற்ற கீரைகள்

திருநீர் பச்சிலை
திருநீர் பச்சிலை திருநீற்றுப் பச்சிலை இலைகளும் மணம் வீசுவதுண்டு. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால்
66.மணலிக்கீரை
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.நமது முன்னோர்கள் பயன்படுத்தி நாம் மறந்து போன கீரைகளில் இதுவும் ஒன்று 1. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை
சாரனைக்கீரை
தானாக சாலையோரங்களிலும், வீட்டுத்தோட்டத்திலும் வளர்ந்து இருக்கும் கீரைகளில் இதுவும் ஒன்று….சாரனையில் வெண்சாரனை, சிகப்பு தண்டு,கருமை நிற சாரனை என்று பல ரகங்கள் உண்டு…இது ஒரு படரும் கொடி

Share

Facebook
Pinterest
WhatsApp