93 – வில்வ இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

வில்வ மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.

மருத்துவப் பயன்கள்: 

இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம்  மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க்  குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன்  இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும்.  பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு  புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு  வலியைப் போக்கும்

 

மற்ற கீரைகள்

ஆவாரை இலை
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ! என்பது பழமொழி.. அத்தனை மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் ஆவாரை…ஆவாரை பூ மட்டுமே நாம் பதன்படுத்தி வருகிறோம், தேநீராக ,குளியல் பொடியாக(இயற்கை
கொத்தமல்லிகீரை
கொத்தமல்லிகீரை கொத்தமல்லி உணவு அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை ஆகும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள்
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் வெள்ளை நிற பூக்களை வைத்து  அடையாளம் காணலாம்.ஆயுர்வேதத்தில் பிரிங்கராஜ்

Share

Facebook
Pinterest
WhatsApp