நாயுருவிக்கீரை

58.நாயுருவிக்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

நாயுருவி என்பது ஒரு அற்புத மூலிகை தாவரம்.

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியினால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.

நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக  நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும்.

நாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல்,  பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.

நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும். நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து  அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.

நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில்  தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.

 

மேலும் : https://keeraigal.com/nayurvi-keerai/

மற்ற கீரைகள்

65.சுக்காங்கீரை
சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு.இது பலவித நோய்களை குணப்படுத்தும்
வெற்றிலை
தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.
99 - அண்டவாயுக்கீரை /பால்பெருக்கிகீரை
மலச்சிக்கல் உடையவர்களுக்கு அருமருந்து..உடம்பில் உள்ள அனைத்து வாயுபிரட்சினையை சரிசெய்யும் ஆற்றல் மிக்க கீரை..   குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால்பெருக்க இக்கீரையை நெய்யில் வதக்கி பூண்டோடு சேர்த்து

Share

Facebook
Pinterest
WhatsApp