60. இரணகள்ளி

இரணகள்ளி

இரணகள்ளி

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.இந்த ரணக்கள்ளி செடியில் பால் வராது..

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி,  காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

இரணக் கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.

கிட்னியல் கல் உள்ளவர்கள் இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று

சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்து வந்தால் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும்

மேலும் : https://keeraigal.com/earanakali/

Share

Share on facebook
Facebook
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp