ஆல இலை
ஆல் போல தழை என்பது மூத்தோர் வாக்கு!
ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.
மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது .அதுவும் ஒவ்வரு ஆலமரமும் மிகப்பழமையாக பாரம்பரிய தொடர்ச்சியும் கொண்டவை.
பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க்கூட்டம்நடத்தபடுவதில்லை , மாறாக ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தாலே அமைதி வந்துவிடும் .
ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும்மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம்திடப்படும். ஞாபகமறதி நீங்கும்.உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.
பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும்
ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாதவிலக்குப்பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.
பொதுவாக சில முக்கிய பொருட்களிலே இளமையை காக்கும் தன்மை இருக்கும். அந்த வகையில் ஆலம்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறதாம். இதனை சாப்பிட்டு வந்தால் செல்களை புதுப்பித்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். இதனால், முக சருமம் நீண்ட காலம் இளமையாக இருக்கும்.
இந்த ஆலமரத்தில் சில முக்கிய பயன்கள் உள்ளன. இவற்றின் இலைகள் முடி பிரச்சினைக்கு தீர்வு தருகிறது. முடி உதிர்வு இருக்கும் பலருக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.
உலர்ந்த அல்லது இளைய ஆல இலைகளை எடுத்து நன்கு அரைத்து கொண்டு, அவற்றுடன் ஆளி விதை எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலசவும். அல்லது ஆளி விதை எண்ணெய்யில் ஆல இலைகளை போட்டு, இந்த ஊறிய எண்ணெய்யை தலைக்கு தடவி வரலாம். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு நின்று வழுக்கை பிரச்சினை தீரும்.
ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.
ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இதுகாது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்கபயன் தருகிறது.
இப்படி தலை முதல் பாதம் வரை கணக்கில் அடங்கா குணங்களை கொண்டுள்ள ஆல மரத்தை போற்றுவோம்!