41. தும்பை கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும்; இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. வெள்ளை நிறப் பூக்களுடன் சிறிய செடிகளாகக் கேட்பாரின்றி விளைந்து கிடக்கும் .

தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு

தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும்

தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும்.

தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.

இன்னும் இதுபோல என்னற்ற மருத்துவ குணங்கள் தும்பையில் உள்ளது…

மற்ற கீரைகள்

புளிச்சக்கீரை
புளிச்சக்கீரை புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை
87.சீமை அகத்தி இலை
சீமை அகத்தி இலைகள் மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது. இதன் இலை, மலர்கள், காய் மற்றும்  மரப்பட்டைகள், உடல் நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது முருங்கையின் பெண் பால் என்று கூட சொல்லலாம்…இது கிராமப்புறங்களில் முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்

Share

Facebook
Pinterest
WhatsApp