தாளிக்கீரை என்பது வேலிகள், சிறு காடுகள் ஆகியவற்றில் காணப்படும் கொடியினம். உடல் கொதிப்பு, எரிச்சல் போக்கும். காமம் பெருக்கும் வல்லமை படைத்தது. இதில் இலை மட்டுமே மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறு நீர்ப் பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை காணாமல் போகும்.
தாளிக்கீரையின் இலையை அரைத்து தினந்தோறும் உடலில் தலை முதல் கால்வரை தேய்த்து குளித்து வர உடல் அரிப்பு நீங்கும் தோல் நோய்கள் அணுகாது. சருமம் பளபளப்பு அடையும்