65.சுக்காங்கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

சுக்கான் கீரை மருத்துவப் பயன் கொண்ட கீரையாகும். இந்தக் கீரையின் மருத்துவக் குணம் பலருக்கும் தெரியாத காரணத்தால் இதை மக்கள் பயன்படுத்துவது குறைவு.இது பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண் குணமாகும்.

இதனை சட்னி செய்தும் சாப்பிடலாம். அதிக இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக்காது. இவர்கள் சுக்கான் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலப்படும், சீராக இயங்கும் . தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வருதல் நலம். இந்த மலச்சிக்கலைத் தீர்க்க சுக்கான் கீரை சிறந்த மருந்து.

சுக்கான் கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் தினமும்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னிபோல் செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசியைத் தூண்டும். சிலருக்கு எது சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் நெஞ்சில் எரிச்சலை உண்டாக்கும்.

இவர்கள் சுக்கான் கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும். சுக்கான் கீரை இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. சுக்கான் கீரையை நன்கு நீர்விட்டு அலசி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி பின் சட்னியாக அரைத்து காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தப்படும்.

எல்லாவித பித்தங்கள், குடல் கோளாறுகள், நெஞ்செரிவு, வாய்வு, குன்ம வலி, வாந்தி இவற்றை நீக்கி. பசி உண்டாக்கும். மதுவின் பாதிப்பை போக்கும், ஈரல் வலுவடையும், ரத்தத்தை சுத்தி செய்யும்

மற்ற கீரைகள்

நாட்டு பொண்ணாங்கன்னி
நாட்டு பொண்ணாங்கன்னி பொன்னாங்கன்னியில் பயன்படுத்தும் கீரைகளாக மூன்று வகை உண்டு…ஆனால் இன்னும் பல ரகங்கள் இருப்பதாக தெரிகிறது..ஒன்று வெள்ளை நிற சிறிய பூக்கள் உடைய வெள்ளை/பச்சை பொன்னாங்கன்னி
62.பண்ணைக்கீரை/மகிலிக்கீரை
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை தீர்க்கும் பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உரு
78.கண்டங்கத்திரி இலை
கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி

Share

Facebook
Pinterest
WhatsApp