43. சொடக்கு தக்காளி கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

சொடக்கு தக்காளி கீரை

நமக்கு அருகில் இருக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு கட்டாயம் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் கிராமப்புறங்களில் சாலையோரங்களிலோ அல்லது வீடுகளில் அருகாமையிலோ தானாகவே வளரும் அபூர்வ வகையான சில வகை மூலிகை செடிகளுக்கு அதிக சக்தி உண்டு. அந்த வரிசையில் இன்று சொடக்கு தக்காளியினைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

  • நம்மில் பல பேருக்கு சொடக்கு தக்காளி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே தெரியாது. இதில் அதனுடைய பயன்களை அறிந்திருக்க வாய்ப்பு என்பது குறைவுதான். கிராமப்புறங்களில் சிறுவர்கள் இந்த தக்காளிப்பழத்தை செடியில் இருந்து பறித்து, நெற்றியில் வைத்து உடைக்கும்போது சொடக்கு போடுவது போல் ஒரு சத்தம் எழும். இதனால்தான் இந்த மூலிகை பழத்திற்கு ‘சொடக்கு தக்காளி’ என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது..சமீபத்தில் சமூக வலைதளங்களில் இந்த சொடுக்கு தக்காளி 1 கிலோ 3000 ரூபாய் விலை போகிறது …என்ற தகவல் உலா வந்தபடி இருக்கிறது…அப்படி என்னதான் இதுல இருக்கு..

எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்த சொடக்கு தக்காளி மருத்துவ குணம் ஏராளம். இந்த சொடக்கு தக்காளி இலைகளையும், கனிகளையும் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டியின் மேல் போட்டு வந்தால், கட்டிகள் சுலபமாக கரையும். கட்டியினால் ஏற்படும் வலியும் சுலபமாக நீக்கிவிடும்.

இந்த செடியின் இலைகளையும், காய்களையும் நசுக்கி, ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு, நன்றாக கொதிக்க வைத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளையும் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால், நம்முடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மருந்தை புற்றுநோய் உள்ளவர்களும் தொடர்ந்து குடித்து வரலாம். புற்று நோயினால் ஏற்படக்கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்கும் என்று சில மருத்துவ குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

இது மனக்கத் தக்காளி வகையை சேர்ந்தது என்பதால், அதில் உள்ள அனைத்து மருத்துவ குணங்களும் இந்த சொடக்கு தக்காளிக்கும் உள்ளது.

மற்ற கீரைகள்

66.மணலிக்கீரை
மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.நமது முன்னோர்கள் பயன்படுத்தி நாம் மறந்து போன கீரைகளில் இதுவும் ஒன்று 1. மலச்சிக்கல் குணமாக: மணலிக்கீரையை
92 - மலைவேம்பு
வேம்பில் அதிக வகைகள் உண்டு. மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் கொடுக்கவேண்டும். மலைவேம்பை நன்கு அரைத்து மூன்று வேளை
ஆவாரை இலை
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ! என்பது பழமொழி.. அத்தனை மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் ஆவாரை…ஆவாரை பூ மட்டுமே நாம் பதன்படுத்தி வருகிறோம், தேநீராக ,குளியல் பொடியாக(இயற்கை

Share

Facebook
Pinterest
WhatsApp