பசலைக்கீரையில் பல ரகங்கள் உண்டு..குத்துசெடி, கொடிவகை, தரைபசலை..அதிலும் கொடி வகையில் சிகப்பு, பச்சை என இரண்டு ரகங்கள் உள்ளது…சிகப்பு தண்டு கொடிபசலை கீரை சிகப்பு நிறத்தில் தண்டு இலை இதய வடிவில் காணப்படும்…இதை ஒடித்து வைத்தாலேயே நன்கு வளர்ந்து விடும்..விதைகள் மூலமும் வளரும்..விதைகள் சிகப்பு நிறத்தில் மிளகு போல இருக்கும்…இந்த கீரையில் என்னற்ற மருத்துவ குணங்கள் உள்ளது…
கொடி பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதை தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.
கொடி பசலைக் கீரைச் சாறு எடுத்து அவற்றில் பாதாம் பருப்பை ஊறவைத்து ஊலர்த்திப் பொடியாக்கி , பசும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கொடி பசலைக் கீரைச் சாறு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.
கொடி பசலைக் கீரையுடன் விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்த்து வதக்கிக் கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை கரையும்.
கொடி பசலைக் கீரை, கொத்தமல்லி விதை , சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
கொடி பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தீராத தாகமும் தீரும்.
கொடி பசலைக் கீரையை உளுந்து ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் , உடல் சூடு , வெட்டைச் சூடு , வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.