சிகப்பு பொன்னாங்கண்ணி

14. சிகப்பு பொன்னாங்கண்ணி

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

சிகப்பு பொன்னாங்கண்ணி

கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ = பொன்னாங்கண்ணி என பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் பயன்படும் ஆற்றல் வாய்ந்தது இக்கீரை. தொடர்ந்து 48 நாட்கள் உண்டு வந்தால் பகலில் கூட நட்சத்திரங்களைப் பார்க்கலாம் எனச் சொல்வார்கள். அந்தளவுக்கு கண்பார்வையை கூர்மையடையச் செய்யும் சக்தி இக்கீரைக்கு உண்டு.

 

”காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்

 

கூசும் பிலீகம் குதாங்குர நோய்-பேசிவையால்

 

என்னாங்கா நிப்படிவம் எமமம் செப்பலென்னைப்

 

பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று’’

 

எனப் போற்றுகிறது, அகத்தியர் குண பாடம்.

 

‘பொன்னாங்கண்ணிக் கீரையை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு, கண் தொடர்பான நோய்கள், காசநோய், இருமல், உடல் உஷ்ண நோய்கள் வாதம் தொடர்பான நோய்கள் வராது’ என்பது இப்பாடலின் சுருக்கமான பொருள். இதில் மூன்று நான்கு ரகங்கள் இருந்தாலும் பச்சை, சிவப்பு என இரண்டு வகைகள்தான் சந்தையில் விற்பனைக்கு வருகின்றன. அதிலும் சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரையைத்தான் நுகர்வோர் அதிகம் விரும்புகிறார்கள்

மற்ற கீரைகள்

கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் வெள்ளை நிற பூக்களை வைத்து  அடையாளம் காணலாம்.ஆயுர்வேதத்தில் பிரிங்கராஜ்
முளைக்கீரை
முளைக்கீரை கீரை என்றாலே நமக்கு இந்த கீரை தான் நினைவுக்கு வரும்.அந்த அளவிற்கு இந்த கீரையை அடிக்கடி நாம் பயன்படுத்தி வருகிறோம்…ஏதோ இந்த ஒரு கீரை தான்
61 முள்ளிக்கீரை
சாலையோரங்களிலும் காடு மேடுகளிலும் தானாக வளர்ந்து நிற்கும் கீரை. பெரும்பாலான இடங்களில் சாலையோர தாவரமாக கண்டது உண்டு. இளம் செடியில் இலை பெரிதாகவும் முட்கள் குறைவாகவும் இருக்கும்.

Share

Facebook
Pinterest
WhatsApp