90 -பூவரசு இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

அரச இலை போலவே பூவரசு இலையும் மருத்துவ குணங்கள் கொண்டதுதான்..

அன்றைய காலத்து கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டுப்பொருளாக இருந்து வந்த பூவரசு மரம் கிணற்றுமேடுகளில் நிச்சயம் இடம்பெற்றிருக்கும். நீர் இறைக்கும் கமலையை இழுத்துவரும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். இந்த மரங்கள் ஆக்சிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களில் ஒன்று என்பதால் கிராமம்தோறும் காணப்பட்டன..இன்று வெளியில் விளையாடும் சிறுவர்களும் இல்லை, கிணறுகளும் இல்லை, மாடுகளும் இல்லை, அதனால் இந்த மரங்களும் இல்லை…

பூவரசு மருத்துவக்குணம் நிறைந்தது ஒரு மரமாகும். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் என எல்லாவற்றுக்கும் மருத்துவக்குணங்கள் உண்டு. பூவரசு இலையை அரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். பூவரசு மரத்தின் காய்களை அம்மி அல்லது கருங்கல்லில் உரசினால் வரக்கூடிய மஞ்சள் நிறப்பாலை தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் தேமல் அகலும். படர்தாமரை என்று சொல்லக்கூடிய தோல் நோயும் குணமாகும். கை-கால் மூட்டு வீங்கியிருந்தாலும் இதே மஞ்சள் நிறப்பாலை பூசினால் குணம் கிடைக்கும்.

பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் விட்டு நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் 50 மில்லி அளவு எடுத்து 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பேதியாகும். இதன் மூலம் தோல் நோய்களிலிருந்து விடுதலை கிடைக்கும். செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு பூவரசம்பட்டை நல்ல மருந்தாகும். அதாவது, 100 ஆண்டுகள் ஆன பூவரசு மரத்தின் பட்டையுடன் காய், பூ சேர்த்துப் பொடியாக்கி காலை, மாலை ஒரு டேபிள்ஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளிப்பதோடு உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்குப் புண் ஏற்பட்டால் அது ஆறாமல் மிகுந்த பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வந்தால் பலன் கிடைக்கும். கழுத்தில் அணியக்கூடிய செயின், கைக்கடிகாரம் போன்றவற்றை அணிவதால் சிலருக்குத் தோலில் கருமை நிறம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் பூவரசம் பூவின் இதழ்களை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி சூடு ஆறியதும் கருமை நிறத்தின் மீது பூசி வந்தால் கரும்படலம் நாளடைவில் மறையும். அல்சைமர் எனும் ஞாபகமறதி நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

மருத்துவக்குணம் நிறைந்த பூவரசு மரம் மிக எளிதாக வளரக்கூடியது. அதன் கிளைகளை வெட்டி நட்டாலே தளிர் விட்டு வளரும். அதிக பிராணவாயுவைப் பெறுவதோடு நோய்களையும் வெல்வோம்; மீண்டும் `பீப்பீ’ ஊதப் புறப்படுவோம்

மற்ற கீரைகள்

2. மணத்தக்காளி கீரை
நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய படுகின்ற காய்கறிகளை நமது மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆனால் ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற
பருப்புகீரை
பருப்புகீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு
சிகப்பு பொன்னாங்கண்ணி
சிகப்பு பொன்னாங்கண்ணி கீரைகளின் ராஜா’ என வர்ணிக்கப்படும் கீரை, பொன்னாங்கண்ணி, இதைத் தொடர்ச்சியாக உணவில் பயன்படுத்தி வந்தால், மேனி பொன் போன்று மினுமினுக்கும். அதனால்தான், பொன்+ஆம்+காண்+நீ =

Share

Facebook
Pinterest
WhatsApp