தரையில் படரும் கீரை வகைகளுள் சிறுபசலை ஒன்றாகும். இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. பசலைக்கீரையில் மிக அதிக அளவில் வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, வைட்டமின் ஏ மற்றும் சி அதிக அளவில் இருக்கின்றன.
உடலின் நோய் எதிர்ப்பு திறன் வயது கூடிக்கொண்டு செல்லும் போது குறைந்து கொண்டே வரும். சிறு பசலை கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது.
சிறு பசலை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் மற்றும் அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறு பசலை கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறு பசலை கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.
வாரத்திற்கு இரண்டு முறை சிறு பசலை கீரை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குறையும்.
சிறு பசலை கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் பற்று வைத்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
தினமும் பச்சையாக சிறிது சிறு பசலை கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும். சிறு பசலை கீரையை கடுமையான இரத்தப் போக்கு மற்றும் அடி வயிற்று வலி ஏற்படும் மாதவிடாய் காலங்களில் பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
புற்று நோயாளிகளுக்கு அவர்களின் உடலின் புற்று செல்கள் தொடர்ந்து உற்பத்தியாகிக் கொண்டேயிருக்கும். சிறு பசலை கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்று செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமை தன்மையை குறைக்க முடியும்.