பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை தீர்க்கும் பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உரு வத்தை உடையது. பண்ணை கீரை ரத்தக்கசிவை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது.
வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றுபோக்கை கட்டுப் படுத்த கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.
பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி வெள்ளை படுதல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம். பண்ணை கீரையின் 4 பூக்களை துண்டுகளாகி, இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைபோக்கு சரியாகிறது. கருப்பையில் ஏற்படும் புண்கள் ஆறும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவிலான ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.