பேய்மிரட்டி இலை… பச்சை இலை பற்றி எரியும் இயற்கையின் ஜாலம்….
நாம் சில அரிதான செடிகளை, மனிதர்களுக்கு மிகுந்த நன்மைகள் அளிக்கும் மூலிகைகளை பெரும்பாலும் சாலையோரங்கள், வயல்வெளிகள் மற்றும் தோட்டங்களில் சர்வசாதாரணமாகக் கண்டு வந்திருப்போம்.
ஆனால், அதற்கெல்லாம் விதிவிலக்கு, இந்தப் பேய்மிரட்டி, வெகு எளிதில் நம் கண்களில் படாது, மிக அரிதாக புதராக மற்ற செடிகள் மண்டியிருக்கும், ஒருசில இடங்களில் மட்டும் காணப்படும் இந்த அரிய நன்மைகள் மிக்க பேய்மிரட்டி செடி.இது தும்பை இனத்தை சேரந்த தாவரம்…பெருந்தும்பை என்றும் கூறப்படுகிறது….
சற்றே நீண்ட இளம்பச்சை வண்ண நிறமுடைய இலைகளையுடைய பேய்மிரட்டியின் மலர்கள் வெளிர் ஊதா போன்ற வயலெட் வண்ணத்தில் கொத்துக்களாக மலர்ந்திருக்கும். அதிக தண்ணீர் தேவையின்றி வறட்சியிலும் வாடாமல் வளரும் பேய்மிரட்டி செடி, அதிக உயரம் வளர்வதில்லை, சில அடிகள் மட்டுமே வளரும் தன்மை உடையது.
சற்றே சுவாசத்திற்கு இடையூறான வாடையைக் கொண்டிருக்கும் இந்தச்செடிகளை அவற்றின் நெடி காரணமாக, மலத்தைக் குறிக்கும் பேச்சு மொழியில், கிராமங்களில் கொச்சையாக, இந்த செடியை பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
பேய்மிரட்டி செடியில், ஆற்றல்மிக்க அனிசொமிக், ஜெரானிக் மற்றும் லுட்டுலினிக் போன்ற அமினோ அமிலங்களும், சைட்டோஸ்டீரால் போன்ற நலம் தரும் தாதுக்களும் அடங்கியுள்ளன.
பேயை விரட்டிய பேய்மிரட்டி!
முற்காலங்களில், மன நிலை பாதிக்கப்பட்ட பெண்களை, பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி இதற்கெனவே இருக்கும் ஸ்பெசலிஸ்ட் பூசாரி, வேப்பிலையால் அந்தப் பெண்ணின் தலையில் ஆவேசமாக ஓங்கி
அடித்து, ஓடிப்போ பேயே, இந்தப் பெண்ணை விட்டு! என்று கர்ஜித்து விரட்டும்போது, சமயங்களில் வேப்பிலை இல்லையெனில் அதற்கு பதிலாக உபயோகிக்கும் ஒரு சக்திமிக்க இலைதான், பேய்மிரட்டி. இதன் காரணமாகவே, பெருந்தும்பையை, பேய்மிரட்டி என்று அழைத்தனர்.
மனிதர்களைப் பிடித்த பேயையே ஓட விரட்டிய பேய்மிரட்டி, மனிதர்களின் உடலில் உள்ள வியாதிகளை, பாதிப்புகளை, நிச்சயம் விரட்டும் தானே!
பேய்மிரட்டியின் இலைகள், மலர்கள், தண்டு மற்றும் வேர்கள் மிக்க மருத்துவப் பலன்கள் மிக்கவை.
பலன்கள்.
பேய்மிரட்டி இலைகளை நீரில் இட்டு காய்ச்சி, அந்த நீரில் ஆவி பிடித்துவந்தால் ஜுரம் விலகும். சளி காய்ச்சல் குணமாகும்.
அதிசய விளக்கு :
உடலின் வியாதிகள் போக்குவதில், பல்வேறு அரிய பலன்களைத் தரும் பேய்மிரட்டி, மனிதனின் மன வியாதிகள், வெளிப்புற பாதிப்புகள் இவை நீங்கவும், பெரும் பலன்கள் தருகிறது.
நீண்ட வடிவத்தில் உள்ள பேய்மிரட்டியின் இலைகளை பறித்து, அந்த இலைகளை நன்கு அலசி, அதை சிறிய விளக்கில் வைத்து, இந்த இலையைத் திரியைப் போல சுருட்டி விளக்கின் எண்ணையில் திரி போல வைத்து, விளக்கேற்றி வர, பச்சைத்திரி மூலம், விளக்கு எரியும் அற்புதம் நிகழும்
கொசுக்கடியைப் போக்கும் :
மேலும், இந்த பேய்மிரட்டி அதிசய விளக்கை, வீட்டில் அதிகம் கொசுத்தொல்லை உள்ள நேரங்களில் ஏற்றி வைக்க, கொசுக்கள் விலகிவிடும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியாக உறங்கலாம். பேய்மிரட்டி இலைகளைத் திரியாகக் கொண்ட இந்த விளக்கு, நெடுநேரம் எரியும், எண்ணை எளிதில் தீராது என்பது, இதன் தனிச் சிறப்பு