69.பாகல் இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

காய்களில் கசப்பு என்றாலே நம் நினைவுக்கு வருவது பாகற்காய் தான்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

பாகற்காயே நாம் அவ்வளவாக உண்ணுவது கிடையாது…ஆனால் பாகல் இலையும் கீரை தான் என்று நாம் அறியாததே!

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

ஒரு பிடி பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய்  குணமாகும்.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று  மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடும்

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் காலரா சரியாகிவிடும். நீரழிவுக்குக்கு ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை  மட்டுப்படுத்தும்.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள். பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

மற்ற கீரைகள்

75. பேய்மிரட்டி
பேய்மிரட்டி இலை… பச்சை இலை பற்றி எரியும் இயற்கையின் ஜாலம்…. நாம் சில அரிதான செடிகளை, மனிதர்களுக்கு மிகுந்த நன்மைகள் அளிக்கும் மூலிகைகளை பெரும்பாலும் சாலையோரங்கள், வயல்வெளிகள்
89 - அவுரி இலை
அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப்
81.பப்பாளி இலை
பப்பாளி மரம் முழுவதும் மென்மையானது எளிதாக உடையக் கூடியது.பப்பாளி இலைகள் மரத்தின் உச்சியில் மட்டும் தான் தொகுப்பாக இருக்கும். அதனால் தான் நம் ஆரோக்கியத்தையும் உயரத்தில் வைக்க

Share

Facebook
Pinterest
WhatsApp