நொச்சி இலை

59. நொச்சி இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

நொச்சி இலை

புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது. நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.

நொச்சி இலையோட வெல்லம் சேத்து கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா உடல் சூடு தணிஞ்சு, உடல் பலம் பெருகும். 1/2 ஸ்பூன் நொச்சி இலைச் சாறோட 1/2 ஸ்பூன் தேன் கலந்து குடிச்சு வந்தா காய்ச்சல் தீரும். கொஞ்சம் நொச்சி, மிளகு, பூண்டு, இலவங்கம் எல்லாம் சேத்து மென்னு தின்னா இரைப்பு நோய் தீவிரம் குறையும்.”

மற்ற கீரைகள்

96 - சதகுப்பைகீரை
கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, சதகுப்பை கீரை. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு.
வெற்றிலை
தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.
முள்ளங்கி கீரை
முள்ளங்கி கீரை கடைகளில் இந்த கீரை கிடைக்காது.நாம் நான் விளைவித்துகொள்ள வேண்டும்.. முள்ளங்கி விதைத்து அதன் கிழங்கு அறுவடையின் போது அதன் கீரையை தூக்கி எறியாமல் அதை

Share

Facebook
Pinterest
WhatsApp