74. நிலவேம்பு இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3  நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும். முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10  சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3  நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க

வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை இந்த தாவரத்திற்கு உண்டு..

ஆயிரம் பாகலின் கசப்பு சுவையை உடையதாயினும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடியது இது ..

வீட்டுத்ததோட்டத்தில் இதை வளர்த்தால் இது இருக்கும் இடத்தில் விஷ பூச்சிகள்,பாம்புகள் வராது என்கிறார்கள்..

மற்ற கீரைகள்

80. நார்த்தை இலை
எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், இரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் நார்த்தங்காயை தவிர்க்கவேண்டும்.
43. சொடக்கு தக்காளி கீரை
சொடக்கு தக்காளி கீரை நமக்கு அருகில் இருக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அதனுடைய அருமை பெருமைகள் நமக்கு கட்டாயம் தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த
கீழாநெல்லி
கீழாநெல்லி நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை

Share

Facebook
Pinterest
WhatsApp