நல்வேளை கீரை (தைவேளை கீரை)

55.நல்வேளை கீரை (தைவேளை கீரை)

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

நல்வேளை கீரை (தைவேளை கீரை)

நல்வேளை முழுத் தாவரமும் காரச்சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இலை, சளி, நீர்கோவை ஆகியவற்றைப் போக்கும். இலைச் சாறு தாது பலம் தரும். பூ கோழை அகற்றும். பசி உண்டாக்கும். தாவரப் பட்டை, தோலில் எரிச்சலூட்டும். காயத்தை உண்டாக்கும்.

விதை, குடல் வாயுவைப் போக்கும். குடல் புழுக்களை வெளியாக்கும். இசிவு நோயைக் கட்டுப் படுத்தும். வியர்வையை அதிகமாக்கும். விதை எண்ணெய், சொறி, சிரங்கு, புண் ஆகியவற்றின் மீது தடவ குணம் தரும். வாத சம்பந்தமான நோய்களையும் கட்டுப் படுத்தும்.

உதிரச் சிக்கல்களையும், பசியின்மையையும் குணப்படுத்தும். நல்வேளைச் செடியைப் பற்றி அகத்தியர் குணபாடம் குறிப்பிடும்போது “சிரநோய் வலி குடைச்சல் தீராச் சயித்தியம், உரநோயிவைக ளொழியும் உரமேவும் ….. பசி கொடுக்கும் நல்வேளை தன்னை நவில்” என்கின்றது.

ஓராண்டு வாழும் சிறுசெடிகள். நிமிர்ந்த வளரியல்பு கொண்டவை. தண்டில் நீண்ட வெண்மையான உரோமங்கள் காணப்படும். இவை இலேசாக ஒட்டும் தன்மை கொண்டவை. இலைகள் முட்டை வடிவமாகவும், ஐந்தாகக் கிளைத்தவை.

மலர்கள் வெண்மையானவை. காய்கள் நீண்டவை. விதைகள் சிறியவை. பழுப்பு நிறமானவை. இந்தியா முழுவதும் பாழடைந்த தரிசு நிலங்கள், சாலையோரங்கள் மற்றும் வேலிகளை ஒட்டி பொதுவாக பரவி காணப்படுகின்றன.

முதல் பருவ மழைக்குப் பின்னர் இந்தத் தாவரத்தை அதிகமாகக் காணலாம். தைவேளை என்கிற மாற்றுப் பெயரும் இந்த தாவரத்திற்கு உண்டு.முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

தாவரம் முழுவதும் ஒரு வித முக்கிய எண்ணெய் பரவிக் காணப்படுவதால் ஒரு விதமான மணமுள்ளதாகவும் பிசுபிசுப்பானதாகவும் இந்தச் செடி காணப்படும்.

காது வலி தீர இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 3 துளிகள் அளவு காதில் விட வேண்டும்.

இருமல் தீர ஒரு பிடி நல்வேளை இலைகளை, தேவையான அளவு உப்புடன் சேர்த்து அரைத்து பசையாக்கி சாப்பிட வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, மூச்சுத் திணறலைக் கட்டுப்படுத்த நல்வேளைச் பூச்சாறு பத்து துளிகள் தாய்ப்பாலுடன் கலந்து முதலுதவி சிகிச்சையாக உள்ளுக் கொடுக்கலாம்.

சீழ் கட்டிகள் உடைவதற்கு நல்வேளை இலையை அரைத்தோ அல்லது வதக்கியோ சீழ் கட்டிகள் மீது பற்றுப் போட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், மார்பு சளி குணமாக நல்வேளைப் பூக்களை சேகரித்து, கசக்கி, சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

குடல் தட்டைப் புழுக்களைக் கொல்ல நல்வேளை விதைகளை நெய் சேர்த்து வறுத்து, அரைத்து தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறுவர்களுக்கு ½ கிராம் பெரியவர்களுக்கு 4 கிராம் என்கிற அளவில் காலை மாலை மூன்று நாள்கள் உள்ளுக்கு கொடுக்க வேண்டும். சிறிதளவு வெந்நீர் குடிக்கலாம். நான்காம் நாள் விளக்கெண்ணெய் ½ தேக்கரண்டி அளவு உள்ளுக்குக் கொடுக்க பேதியாகி குடலின் தட்டைப் புழுக்கள் வெளியாகும்

மற்ற கீரைகள்

77.கொய்யா இலை
கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி
96 - சதகுப்பைகீரை
கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, சதகுப்பை கீரை. இதை சமையலுக்கு பயன்படுத்தலாம். பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு.
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது முருங்கையின் பெண் பால் என்று கூட சொல்லலாம்…இது கிராமப்புறங்களில் முள் முருங்கை,முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்

Share

Facebook
Pinterest
WhatsApp