முள்ளங்கி கீரை

9. முள்ளங்கி கீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

முள்ளங்கி கீரை
கடைகளில் இந்த கீரை கிடைக்காது.நாம் நான் விளைவித்துகொள்ள வேண்டும்..

முள்ளங்கி விதைத்து அதன் கிழங்கு அறுவடையின் போது அதன் கீரையை தூக்கி எறியாமல் அதை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது…கருக்மொருக்கென்று சுவையாக இருக்கும்…நம்மில் பெரும்பாலானோர் முள்ளங்கியை மட்டும் பயன்படுத்திவிட்டு,அதன் கீரையை அலட்சியம் செய்து தூக்கி எறிந்துவிடுகிறோம்.  ஆனால்,முள்ளங்கிக் கிழங்கைவிட அதன் கீரையில்தான் ஏராளமான‌ மருத்துவக் குணங்கள் உள்ளன‌..

முள்ளங்கி கீரையானது இரைப்பைக் கோளாறு, சிறுநீரக நோய்கள்,மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்றவைகளை குணப்படுத்துகிறது.

முள்ளங்கி கீரைய நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

மலச்சிக்கலைக் குணப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கி கீரைக்கு உண்டு.

கல்லீரலில் உண்டாகும் பலவிதமான கோளாறுகளை முள்ளங்கி கீரை குணப்படுத்தும்.

முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள், இதயப் படபடப்பு,இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

முள்ளங்கிக் கீரையின் சாற்றை 5அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும்.

சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு,கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும்.

முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும்.

சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள்,முள்ளங்கிக் கீரையின் சாற்றை 1 ஸ்பூன் எடுத்து 3 வேளைகளும் சாப்பிட்டு வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும்..

மற்ற கீரைகள்

41. தும்பை கீரை
தும்பை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். 50 சென்றிமீட்டர் வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து
74. நிலவேம்பு இலை
நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது. நிலவேம்பு
94 - அதொண்டை கீரை
ஆதொண்டை கீரை, கொடி வகையை சேர்ந்தது. தடிப்பான இலைகளை கொண்டது. துளிர்விடும் பொழுது மஞ்சள் நிறமாகவும் முற்றிய இலைகள் பச்சை நிறத்திலும் இருக்கும். இக்கீரைக் கொடி வேலிகளில்

Share

Facebook
Pinterest
WhatsApp