சாலையோரங்களிலும் காடு மேடுகளிலும் தானாக வளர்ந்து நிற்கும் கீரை. பெரும்பாலான இடங்களில் சாலையோர தாவரமாக கண்டது உண்டு. இளம் செடியில் இலை பெரிதாகவும் முட்கள் குறைவாகவும் இருக்கும். முற்றும்போது இலை சிறுத்து முட்கள் பெரிதாக இருக்கும். தண்டுகீரை/முளைக்கீரை போலவே இருக்கும். பச்சை தண்டுகளையும் சிவப்பு தண்டுகளையும் பெற்றிருக்கும். மழைக்கு பிறகு நிறைய வளர்ந்து காணப்படும்..
ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது..சிறுநீர் பெருக்கி, உடலில் உள்ள வீக்கம் குறைக்கும்,தாது உற்பத்தி ,செரிமான கோளாறுகள் சரிசெய்யும்,புண்கள் ஆற்றும், சிறுநீரக கற்கள் கரைக்கும் தன்மை என்ன கணக்கில் அடங்கா குணங்களை கொண்டுள்ள கீரை இது…