திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் விளங்குகிறது.
திருவாச்சி மரம், வல்லாரை இலைகளைப் போன்ற காம்புகளைச் சுற்றி படர்ந்த பசுமையான இலைகளைக் கொண்ட, குறு மரமாகும், திருவாச்சியின் மலர்களில் உள்ள, அதிக அளவு மகரந்தத்தையும், தேனையும் சுவைக்க தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் போட்டியிடுவதைக் காண்பதே, கண்களுக்கு விருந்தாக அமையும். இலை, மலர் மற்றும் பட்டை இவற்றின் மூலம், நலம் தரும் மருத்துவ பலன்களைக் கொண்டது, திருவாச்சி
உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது, திருவாச்சி இலைகள். இரத்த பேதி, இரத்த வாந்தி, மலச்சிக்கல் போக்கும் ஆற்றல் உள்ளவை.
திருவாச்சி குடிநீர்:
திருவாச்சி பூக்களின் மொட்டுக்களை நன்கு அலசி, ஒரு லிட்டர் நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீர் கால் லிட்டர் அளவில் சுண்டி வந்ததும், எடுத்து வைத்துக் கொண்டு, காலை மாலை இருவேளை, இருபது அல்லது முப்பது மிலி அளவு பருகி வர, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆறும். பெண்களுக்கு
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத இரத்தப் போக்கு குணமாகும். இரத்த மூல பாதிப்புகள் விலகும்.
திருவாச்சி துவையல்
தேவையான அளவு:
நன்கு அலசிய திருவாச்சி இலைகளை வாணலியில் இட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிய வெங்காயம், பச்சை மிளகாயை வாணலியில் இட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொண்டு, வதக்கிய திருவாச்சி இலைகள், சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், புளி மற்றும் இந்துப்பை சேர்த்து, சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து அரைத்து எடுக்க, கறிவேப்பிலை போன்ற நறுமணத்துடன் அற்புதச் சுவைமிக்க திருவாச்சி துவையல் கிடைக்கும்.
குடல் பிரட்சனை, சரும நோய்கள், கண் நோய்கள் என பல நோய்க்கு அருமருந்து இந்த திருவாச்சி…