நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக் கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, லச்ச கெட்ட கீரை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரையை அழகுக்காகவே பலரும் வீடுகளில் வளர்க்கிறார்கள்! உண்மையில் இது உண்ணக் கூடியது. மிகக்குறைந்த பராமரிப்பில், எந்த தட்பவெப்ப நிலையையும் தாங்கி இது வளரும். முருங்கை போன்றே இதையும் ஒரு சிறிய கிளை (போத்து) கொண்டோ கொட்டை மூலமாக கன்றாக வளர்ந்த பின்போ நடலாம்.
இது மூட்டு வலிக்கு சிறந்த மருந்து. உடலிலுள்ள விஷங்களை வெளிக்கொண்டு வரும் என்பதாலேயே இதை நஞ்சுண்டான் கீரை என்கிறார்கள். மற்ற கீரைகளைப் போல் இதையும் பாசிப் பருப்பு சேர்த்து பொரியலாகவோ, கூட்டாகவோ, துவையலாகவோ, சூப்பாகவோ பயன்படுத்தலாம். பெரிய இலையாக இருப்பதால் நரம்புகளை நீக்கிய பிறகே பயன்படுத்த வேண்டும்.