கீழாநெல்லி

31 கீழாநெல்லி

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

கீழாநெல்லி

நமது கால்களுக்குக் கீழ் வளர்ந்தாலும், நம் தலையைக் காக்கக்கூடிய மூலிகைகள் பல உண்டு. எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளர்வதால், எண்ணற்ற மருத்துவக் குணங்களைக்கொண்ட அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய  மூலிகைகள்  உண்டு. அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’

இதற்கு  கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே இரண்டு வரிசைகளில் சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் அழகாக வரிசைகட்டி நிற்கும்.

கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் கீழாநெல்லி செடி, தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும்.

கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், பசுவின் பாலை காய்ச்சி காலை மாலை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

நல்லெண்ணைய் இரண்டு தேக்கரண்டி, கீழாநெல்லி வேர், சீரகம் ஆகியவை சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து, பின்பு நன்கு காச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி நீங்கும்.

கீழாநெல்லி 4 அல்லது 5 செடி, சீரகம், ஏலக்காய், திராட்சை 20 கிராம், தண்ணீர் இரண்டு லிட்டர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு வேளைக்கு 60 முதல் 90 மில்லி தினம் இரு வேளை சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நெல்லிக்காய் 30 கிராம், 4 மிளகுடன் இடித்து 2 டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி மூன்று வேளையாகக் குடித்து வந்தால் உடல் சூடு, காய்சல், தேக எரிச்சல் தீரும்.

இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் குளித்தால் சொறி சிரங்கு குணமாகும்.

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் கலக்கி 45 நாள்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் தீரும். இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி குழித்தால் பார்வை கோளாறு தீரும்

ரத்தப்பரிசோதனை, ரத்தத்தை மாற்றுதல், பல பெண்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உறவு கொள்ளுதல் போன்ற காரணங்களால் பரவுகிற ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி போன்ற நோய்த்தொற்றுக்களைக் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு இருக்கிறது. ஒருவருக்குப் பல நாட்களாக ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி பாதிப்பு இருந்தால் கல்லீரலை முடக்கிவிடும். இதன் காரணமாக, கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.

ஹெப்படைட்டிஸ்-பி மற்றும் சி நோய்களைக் குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும், கல்லீரலில் சேர்கிற அளவுக்கு அதிகமான கொழுப்பைக் கரைக்கவும், மதுப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் இம்மூலிகை பெருமளவில் உபயோகிக்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல், பித்தம் காரணமாக ஏற்படுகிற முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்ற பிரச்னைகளையும் கீழாநெல்லி குணப்படுத்துகிறது.

More : https://keeraigal.com/kelaneli/

மற்ற கீரைகள்

8. பிரண்டை
இது கீரை வகையை சேராவிடிலும் இதன் மருத்துவ குணம் அபாரம்…இந்திரனின் வஜ்ராயிதம் அளவிற்கு வலிமையை தரவல்லதால் வஜ்ரவள்ளி என்று அழைக்கப்படுகிறது..இது உயிர்வேலிகளில் தானாக வளரும் தாவரம்…இதில் பட்டை,உருட்டு,ஓலை,சதுரம்
85. மா இலை
அனைவரும் விரும்பும் சத்துமிகுந்த ஒரு பழம் என்றால் அது மாம்பழம்தான். மாம்பழம் மற்றும் மாங்காய் சாப்பிடுவதற்காகவே கோடைகாலத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களே இங்கு அதிகம். ஏனெனில் இது சுவை
வல்லாரைக்கீரை
வல்லாரைக்கீரை கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை. வல்லாரை செடியின் இலையை நிழலில் உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு

Share

Facebook
Pinterest
WhatsApp