நாய் கடுகு! பலர் இந்த பெயரை கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த செடியை நீங்கள் தெருவோரங்களில், கட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம் காணலாம், மழை காலங்களில் இது அதிகமாக காணப்படும். ஆனால் அதுதான் நாய் கடுகு என்று பலருக்கும் தெரியாமல், ஏதோ ஒரு களைச்செடி என்று கடந்து சென்று விடுவார்கள்.
இந்த நாய் கடுகு (Wild mustard seeds) செடியின், பூக்கள், விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவம் மற்றும் உணவுக்கு பயன்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர், கிளிமே விச்கோச (Cleome viscosa). இந்த நாய் கடுகை, நாய்வேளை,மற்றும் காட்டுகடுகு என்ற பெயரிலும் அழைப்பார்கள்.
இந்த நாய் கடுகு கீரையை சமையலில் பயன்படுத்தலாம். இதன் இலைகளை பறித்து மற்ற கீரை போல சமைக்கலாம். அல்லது பிற கீரைகளுடன் சேர்த்தும் சமைக்கலாம். இந்த கீரையில் துவையல், பொரியல் மற்றும் கடிந்தும் சமைத்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால், வயிற்றில் இருக்கும் பிரச்சனைகள், குறிப்பாக வாயு, வயிற்று புண், வயிற்றில் இருக்கும் நுண் புழு போன்றவை அகலும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கை சீர் செய்ய இந்த நாய் கடுகு உதவியாக உள்ளது. சிறிது நாய் கடுகை எடுத்து, மிதமாக வறுத்து, துவையல் செய்து, சுடுசோற்றுடன் சாப்பிட வேண்டும்.