76. இலந்தை இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

முந்தைய காலங்களில் சிறுவர்கள் உண்ணும் சுவையான தீண்பண்டங்களில முக்கியமானது இலந்தை பழம்..இதெல்லாம் 90 ஸ் கிட்ஸ்க்கு என்னவென்றே தெரியாத நிலைதான்…அதன் பழத்தில் எவ்வளவு சத்தோ ,அதேபோல அதன் இலைகளும் சத்து மிக்கது…

இதன் இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள்.

இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள். தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.

மற்ற கீரைகள்

ஆவாரை இலை
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ! என்பது பழமொழி.. அத்தனை மருத்துவ குணங்கள் உள்ள தாவரம் ஆவாரை…ஆவாரை பூ மட்டுமே நாம் பதன்படுத்தி வருகிறோம், தேநீராக ,குளியல் பொடியாக(இயற்கை
பாலக்கீரை
பாலக்கீரை பாலக்கீரை ஒரு கீரை வகையைச் சேர்ந்த மூலிகைச் செடியாகும். தென் ஐரோப்பாவில் இதன் வேரிலிருந்து சர்க்கரை எடுக்கிறார்கள். இது வீட்டில் வளர்க்க ஏற்ற கீரையாகும். இந்தப்
மூக்கிரட்டை கீரை
மூக்கிரட்டை கீரை நம்முடைய முன்னோர்கள் முதல் நவீன காலம் வரை கீரைகள் பற்றிய எண்ணங்கள் எல்லாருக்குமே ஒன்று தான். அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று. நம்முடைய

Share

Facebook
Pinterest
WhatsApp