தவசிகீரை
உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு தவசிகீரை தான்….
தவசி கீரை யாரும் கேள்விப்படாத ஒன்றாக கருதப்படலாம். இதில் அடங்கி இருக்கும் வைட்டமின்கள் நமக்கு கொடுக்கும் நலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
வைட்டமின் எ, வைட்டமின் பி , வைட்டமின் சி,வைட்டமின் கே போன்றவை அடங்கி உள்ளதால் இதை Multivitamin கீரை என்றும் அழைக்கின்றனர்….
ரத்தத்தில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும் மற்றும் கெட்ட ரத்தங்கள் வெளியேற்ற பட்டு ரத்தத்தை சுத்திகரித்து உற்பத்தி செய்யும்.
பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் காண படுகிறது .
ஆங்கிலத்தில் Chakurmanis என்று அழைக்கப்படும்….எளிதாக குச்சி வைத்தாலே நன்றாக வளர்ந்து விடும்…விதைகள் மூலமும் வளர்க்கலாம்…சிலர் தவசிகீரையும் தவசிமுருங்கையும் ஒன்று என்று கருதுகின்றனர்…ஆனால் இரண்டும் வேறு வேறு…இந்த கீரையை மாதம் ஓரீறு முறை எடுத்துக்கொண்டால் போதுமானது…