72.அருகம்புல்

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான  அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி  நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும்.

அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது.

அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிரது.

சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இன்னும் மாதவிலக்கு, வெள்ளைபோக்கு, வயிற்று பிரட்சனைகள், தோல் நோய்களுக்கான மருந்து என இதன் பயன்கள் சொல்ல நேரம் போதாது ..

மற்ற கீரைகள்

லச்லக்கெட்டை கீரை
நஞ்சு கொண்டான் கீரை, நச்சுக் கொட்டை கீரை, நஞ்சுண்டான் கீரை, லச்ச கெட்ட கீரை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த கீரையை  அழகுக்காகவே பலரும் வீடுகளில்
இரணகள்ளி
இரணகள்ளி கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால்

Share

Facebook
Pinterest
WhatsApp