அகத்திகீரை

20. அகத்திகீரை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

கால்சியம் மிகுதியாக உள்ள கீரை இது.அகம்(உள்ளே)+தீ உடலின் நச்சுக்களை சுத்தப்படுத்தும் என்பதால் அகத்தீ என்றாயிற்று….எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், வளரும் பருவத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு உணவு. பல மருத்துவக் குணங்கள் இந்தக் கீரைக்கு உண்டு. புரதமும் கார்போஹைட்ரேட்டும் ஓரளவுக்கு உள்ளன. இதில் பாஸ்பரஸ் அதிகம் என்பதால், பல் நலன் காக்க உதவுகிறது. வைட்டமின் ஏ சத்தும் இரும்புச் சத்தும் தேவைக்கு உள்ளன. கண்ணுக்கு நல்லது. இதைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மாலைக்கண் நோய் குணமாகும். ரத்தசோகை நோயாளிகளுக்கு இது உதவும்

வறட்சியைத் தாங்கி வளரும். இது ஆடு, மாடுகளுக்கு சிறந்த  தீவனம் என்றாலும் அகத்தியை நாம் அடிக்கடி உண்ணக் கூடாது. அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இதை உடலையும் இரத்தத்தையும் சுத்தப்படுத்தவே  பயன்படுத்துகிறோம். இந்நிலையில் உடலில் இயற்கையாக இல்லாத எல்லா பொருட்களையும் இது வெளியேற்றும் என்பதால் அகத்திக் கீரையை  அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.இதனாலேயே மருந்துகளை உட்கொள்ளும் காலங்களில் இதை சாப்பிடக் கூடாது என்கிறது சித்த மருத்துவம். தவிர வாயுவை உண்டுபண்ணும்  தன்மையும் அகத்திக்கீரைக்கு உண்டு. என்றாலும் இதில் 63 விதமான சத்துக்கள் இருப்பதால் பத்தியம் முறிக்கும் போது சுண்டைக்காயோடு சேர்த்து  அகத்தியை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது. சுண்டைக் காயையும், அகத்தியையும் சேர்த்து உண்ணும் போது உடலுக்கு பத்தியம் / விரதத்துக்குப்  பின் நமக்கு தேவையான அனைத்து விதமான விரதம் / பத்தியத்தால் இழந்த சத்துக்களும் திரும்பக் கிடைக்கும் என்கிறது நம் தமிழ் மருத்துவ முறை

மற்ற கீரைகள்

புண்ணாக்கு கீரை
புண்ணாக்கு கீரை நாம் சாப்பிடும் உணவுகளில் கீரை வகைகள் எப்போதுமே நமக்கு நன்மைகளை தருவதாகவும் நோய்களை நீக்கும் அருமருந்தாகவும் இருக்கின்றன பலவகையான கீரைகள் இருந்தாலும் ஒருசில கீரைகளை
72.அருகம்புல்
அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு
80. நார்த்தை இலை
எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், இரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் நார்த்தங்காயை தவிர்க்கவேண்டும்.

Share

Facebook
Pinterest
WhatsApp