93 – வில்வ இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

வில்வ மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.

மருத்துவப் பயன்கள்: 

இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம்  மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க்  குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன்  இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும்.  பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு  புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு  வலியைப் போக்கும்

 

மற்ற கீரைகள்

82 வாழை இலை
தலை வாழை இலையில் நமக்குப் பிடித்தமான சைவம் அல்லது அசைவ உணவுகளைச் சாப்பிடுவதே ஒரு அலாதி சுகம். வாழை இலை உணவின் ருசியை அதிகரிக்கச் செய்யும். நமது
பசலைகீரை
தரையில் படரும் கீரை வகைகளுள் சிறுபசலை ஒன்றாகும். இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு. பசலைக்கீரையில் மிக அதிக அளவில்  வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.
42.கற்பூரவல்லி
கற்பூரவல்லி கற்பூரவல்லி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்க இச்செடியின் தண்டு

Share

Facebook
Pinterest
WhatsApp