87.சீமை அகத்தி இலை

தாவரவியல் பெயர்:

மண் வகைகள்:

சீமை அகத்தி இலைகள் மருத்துவ பலன்களும் தரவல்ல செடியாக குறுமரமாகத் திகழ்கிறது. இதன் இலை, மலர்கள், காய் மற்றும்  மரப்பட்டைகள், உடல் நல பாதிப்பைத் தீர்க்கும் மூலிகை மருந்துகளில் பயன்படுகின்றன.

முகம் கறுத்து, சருமம் வறண்டு போகும் பாதிப்பை சரி செய்ய, இரவு  உறங்குமுன், சீமை அகத்தி இலைகளை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் இதமாக பூசிவிட்டு, காலையில் எழுந்தவுடன் மிருதுவாக  முகத்தை நீரில் அலசி வர, வறண்ட சருமம் கொண்ட முகம், மிருதுவாகி, மீண்டும் பொலிவாகும். முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள், சிறிய பூனை முடிகள்  நீங்கி, முகம் வனப்புடன் விளங்கும்.

சீமை அகத்தி இலையை உடலுக்கு அழகு தரும் வெளிப்பூச்சு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். உடலில் வியர்வை தோன்றும் இடங்களில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றால் சருமத்தில் உண்டாகும் இந்த அடர்ந்த சிவப்பு வண்ண தேமல் போன்ற வடிவம், அரிப்பையும் சொரிந்தால், உடலில் பரவக்கூடிய  தன்மையும் கொண்டது

இந்த படர் தாமரை பாதிப்பை சரி செய்ய, பசுமையான சீமை அகத்தி இலைகளை நன்கு மையாக அரைத்து, அதில் சிறிது தேங்காயெண்ணை சேர்த்து, தினமும் இருவேளை படர் தாமரை உள்ள இடங்களில் தடவி வர, விரைவில் பாதிப்புகள் நீங்கி, உடல் சருமம் இயல்பாகும்.

சீமை அகத்திக் கீரை, பூஞ்சைத் தொற்று மற்றும் வியாதி எதிர்ப்புத் தன்மையில் சிறந்த ஆற்றலைப் பெற்றுள்ளது.

மற்ற கீரைகள்

51.காட்டுக்குடுகு கீரை /நாய்வேளை கீரை
நாய் கடுகு! பலர் இந்த பெயரை கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த செடியை  நீங்கள் தெருவோரங்களில், கட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம்
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி அம்மான் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள எல்லா இடங்களிலும் காணப்படும். மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால்
89 - அவுரி இலை
அவுரி முழுத்தாவரமும் கசப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் காரப் பண்பும் கொண்டது. இலைகள், வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப்

Share

Facebook
Pinterest
WhatsApp